அதிமுகவை இப்போது வழிநடத்திக்கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. அவரது மகன், மருமகன், மற்றும் அவருடைய அக்காவின் மகன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், அதிமுகவின் குடும்ப அரசியல் குறித்து இப்போது பேசுவதன் காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதை அதிமுகவில் இருக்கும்போது கேட்டிருந்தால் அப்போதே என்னை நீக்கியிருப்பார்கள் என கூறினார்.