அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் இது குறித்து பேட்டியளித்த அவர், இபிஎஸ்-ன் பெயரைக் குறிப்பிடாமல், "அதிமுகவிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளையின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை" என கூறியுள்ளார். மேலும், தன்னால் முடியாததை முடியும் என கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றக் கூடாது என்றும் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.