பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய நினைவை இழந்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது, கோவிந்தா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்களை இன்று (நவ., 12) மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.