70-களில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.