பிரபல பக்தி பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்

2626பார்த்தது
பிரபல பக்தி பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்
அம்மன் பாடல்களை பாடி உலகப் புகழ்பெற்ற சக்தி சண்முகராஜா காலமானார். இவர் பாடி இசையமைத்த மலையனூர் அங்காளியே, வேப்பிலை நாயகியே, ஆடி வாரா ஓடி வாரா போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவையாகும். சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சக்தி சண்முகராஜா அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்திலேயே மறைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி