பிரபல கன்னட திரைப்பட நடிகர் ‘கடப்பா’ என்று அழைக்கப்பட்ட சன்னேகவுடா (89) இன்று (நவ.12) காலமானார். பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2015-ஆம் ஆண்டு வெளியான ‘திதி’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவர் தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்னேகவுடாவின் மறைவுக்கு கன்னடத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.