சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு (
96) இன்று காலமானார். கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்தவர் புவியரசு. சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டார். 2007ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், 2009ல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய 'முக்கூடல்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.