தமிழ் சின்னத்திரை நடிகர் காலமானார்

6021பார்த்தது
தமிழ் சின்னத்திரை நடிகர் காலமானார்
சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக பயணித்து வந்தவர் நேத்ரன் (47). இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தன்னோடு சீரியலில் நடித்த தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நேத்ரன், நேற்று (டிச.3) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் இறப்பு செய்தி சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி