பிரபல இயக்குநரும், நடிகருமான வி.சேகரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று வி. சேகரின் மகன் கார்ல் மார்க்ஸிடம் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.