CM விஜய் மனைவி சங்கீதா முன் 'அண்ணி.. அண்ணி' என கோஷமிட்ட ரசிகர்கள்

1பார்த்தது
தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை கமலா திரையரங்கில் கண்டு ரசித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய அவரைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் "அண்ணி... அண்ணி..." என உற்சாக முழக்கமிட்டு ஆரவார வரவேற்பு அளித்தனர். இதற்குப் புன்னகையுடன் கைகாட்டி அமர்ந்தார். முன்பு விவாகரத்து வழக்கில் சங்கீதாவை விமர்சித்த ரசிகர்களே தற்போது வரவேற்பு அளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி