தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு IPL தொடரில் விளையாடாத 44 வயதான
தோனி, அடுத்த சீசனில் களம் காண்பாரா என்ற கேள்விக்கு, அது அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
தோனி இந்த ஆண்டு முழுவதும் அணியுடன் பயணித்தது இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என குறிப்பிட்ட அவர், போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அணியில் தோனியின் தாக்கம் எப்போதும் பெரியதாகவே இருக்கும் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.