சிறுத்தையை கோடரியால் தாக்கி கொன்ற விவசாயி

2577பார்த்தது
சிறுத்தையை கோடரியால் தாக்கி கொன்ற விவசாயி
சிறுத்தையிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள விவசாயி அதனை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார். ராஜஸ்தான் கோட்புட்லி-பெஹ்ரூர் மாவட்டத்தில் கர்கதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷ்ரவன் குர்ஜர், தனது ஆடுகளுக்குத் தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்றபோது, சிறுத்தை அவரைத் தாக்கியது. காயமடைந்த விவசாயி, தன்னைத் தற்காத்துக்கொள்ள கோடரியால் சிறுத்தையின் தலையில் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றுள்ளார். சிறுத்தையின் உடல் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விவசாயியிடம் விசாரணை நடக்கிறது.
Job Suitcase

Jobs near you