உயர்கிறது ஃபாஸ்டேக் கட்டணம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

7140பார்த்தது
உயர்கிறது ஃபாஸ்டேக் கட்டணம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணத்தை ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வின் மூலம், ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு தடையின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த ஆண்டு பாஸை 'Rajmarg Yatra' செயலி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், நெடுஞ்சாலை பயணங்களை திட்டமிடுவோர் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.