குஜராத்தில் கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

8433பார்த்தது
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் கப்ரடா தாலுகாவின் கும்ப்காட் பகுதியில் லாரி மற்றும் ஈகோ கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அம்பா ஜங்கல் கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டது. கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நன்றி: ANI