4 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 19 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை பல ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது தந்தை தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 4 ஆண்டுகளாக கொடுமை நடந்ததாகவும் கூறியுள்ளார். சிறுமி காணாமல் போனதை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தந்தையே புகார் அளித்த நிலையில், விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.