கடலூர் மாவட்டம் நெய்வேலியில் குடும்ப சூழ்நிலையால் 7 வயது மகனை வளர்க்க முடியாமல், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் ஜஸ்வந்தராஜ் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை ஸ்டீபன் ராஜ் (29) தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். 6 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி பவித்ரா தற்கொலை செய்த நிலையில், மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.