கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்த்த பவிசங்கர் (33) என்பவரது மனைவி ஸ்னாஷா (28). இவர்களுக்கு வாசுகி (6) என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பவிசங்கர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.