மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை சாலைகிராமம் அருகே, குடும்பப் பிரச்னை காரணமாக கார்த்திக் என்பவர் தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த பெண்ணின் தந்தை மதியழகன் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக் மற்றும் அவரது தந்தை ஜெயராமச்சந்திரன் ஆகியோர் மதியழகனை கம்பால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.