மலேசியாவில் 35 வயது நபர் தனது 15 மற்றும் 16 வயது வளர்ப்பு மகள்களை 2020ம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் இரு மகள்களும் தனது தாயிடம் கூறவே, தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் அவருக்கு 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.