வேலூர் மாவட்டம் பல்லாலகுப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய தந்தையை காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மகனும் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.