வீட்டில் மயங்கிய தந்தை மீட்பு.. ஸ்வீடனில் இருந்து மதுரை தீயணைப்புத்துறைக்கு மகன் தகவல்

3பார்த்தது
மதுரையச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்வீடனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனியே வசிக்கும் தனது தந்தைக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன மகன், மதுரையில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது, கழிவறை அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவரை பத்திரமாக மீட்டனர்.

நன்றி: நியூஸ்18