ஈரானுடனான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 34-லிருந்து 42-ஆக உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் ஆள்சேர்ப்பை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், ஈரானுக்கு எதிரான போரை தொடருமாறு சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.