உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் மக்கள் கேன்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அதிகளவில் வாங்கிச் சேமிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.