பாலியல் வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல்

8430பார்த்தது
பாலியல் வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல்
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தியை இன்று (மே 30) கைதிகள் தாக்கியுள்ளனர். ஏற்கனவே கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக், நேற்றுதான் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மீண்டும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி