கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஸ்ரீகாரியம் பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா மூலம் பெண் ஊழியர்களின் அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்ய முயன்ற ராகுல் அசோக் (38) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மார்ச் 13, 2026 அன்று, பெண் ஊழியர்கள் கழிவறையில் இருந்த ரகசிய கேமராவைக் கண்டுபிடித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் தலைமறைவானார். தற்போது அவர் பதுங்கியிருந்த இடத்திலிருந்து போலீசார் கைது செய்தனர்.