ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது, சிறப்பு எஸ்.ஐ. குமார் தன்னிடம் பாலியல் தொல்லை செய்ததாக அந்த பெண் காவலர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.