சர்வதேச
போர் மற்றும் இறக்குமதி சிக்கல்களால் இந்தியாவில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட வேளாண் உரங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால், சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் 2-வது பெரிய வேளாண் நாடான
இந்தியா, உர தேவைகளுக்கு சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. தற்போதைய மேற்கு ஆசிய
போர் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி, தங்களை காக்குமாறு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.