மத்திய கிழக்கு நாடுகளில்
போர் பதற்றத்தால் உர இறக்குமதி பாதிக்கப்பட்டு, விலை 20% வரை உயர்ந்துள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கவலை தெரிவித்துள்ளா
ர். ஒன்றிய பபாஜக அரசு உள்நாட்டு உர உற்பத்தியை அதிகரிக்காததே இந்தத் தட்டுப்பாட்டிற்கு காரணம் எனச் சாடியுள்ள அவர், விலை உயர்வை ரத்து செய்து, விவசாயிகளுக்குப் போதிய உரங்களை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.