கரூர் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த அவர், "உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என தவெகவின் ஆதவ் அர்ஜுனா பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும். கரூர் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது ஒரு இடைக்கால தீர்ப்பு மட்டுமே. போலியாக மனு தாக்கல் செய்திருப்பது உறுதியானால், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.