திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி (69) காலமானார். இவர், 'பாட்டாளி மகன், விக்னேஷ்வர், மாசி, மிஸ்டர் மகாராணி' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் நடிகர் அர்ஜுன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. கோவை மணிக்கு மனைவி, மகள் உள்ளனர். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.