தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 23ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிப்., 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. கடந்த டிச., 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,43,76,756-ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.