தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆக.5) தொடங்கவுள்ள நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய பையுடன், கையில் ஜெபமாலையை ஏந்தியபடி வருகை தந்த நிதியமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சரின் ஆசிகளுடன் சட்டப்பேரவைக்கு சென்றார். இன்னும் சற்று நேரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.