கடற்கரையில் குப்பை போட்டால் ரூ.5,000 அபராதம்.. மாநகராட்சி கடும் எச்சரிக்கை

30பார்த்தது
கடற்கரையில் குப்பை போட்டால் ரூ.5,000 அபராதம்.. மாநகராட்சி கடும் எச்சரிக்கை
பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதை கண்காணிக்க சிறப்பு தூய்மை படைகள் மற்றும் இயந்திரங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குப்பைகளை மாநகராட்சி அமைத்துள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி