மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புகையிலை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. ஆகையால், விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு மெட்ரோ ரெயில்வே சட்டம் 2002 மற்றும் டிக்கெட் சட்டம் 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.