தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று (பிப்.11) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அந்த கட்டிடத்தையே தீ சூழ்ந்து கொண்டது. நகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக, பள்ளி மூடப்பட்டிருந்ததால், மாணவர்கள் அங்கு இல்லாத காரணத்தினால் பெரும் சோகம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.