சேலம் அம்மாபேட்டை பகுதியில், ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ரூ,30,000 ரொக்கம் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாகின. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.