உலோக தொழிற்சாலையில் தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

3பார்த்தது
உலோக தொழிற்சாலையில் தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்
கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவி ரஞ்சன் (24) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் லேசான காயமடைந்த 6 தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி