பீகார் மருத்துவமனையில் தீ விபத்து. பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

2பார்த்தது
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து. பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
பீகார் மாநிலம் முசபர்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் சிக்கி, அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 20 பேருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி