சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இன்று (ஜன.14) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.