ஹைதராபாத் - ஜெய்ப்பூர் விரைவு ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ விபத்து

6151பார்த்தது
ஹைதராபாத் - ஜெய்ப்பூர் விரைவு ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ விபத்து
ஹைதராபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகளில் (B1, B2) இன்று இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் புறப்படுவதற்குச் சற்று முன்பு இந்த விபத்து நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாகப் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி