மதுரை மாவட்டம் மேலூர் அருகே தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வீட்டின் மேல் தளம் பலத்த சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் சிக்கிய தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.