அமெரிக்காவில் 10 மாதங்களாக
வேலை தேடி வந்த நபர், கிடைத்த புதிய வேலையில் சேர்ந்த 2.5 மணி நேரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். பணியிடத்தில் தன்னை சுத்தமாக இல்லை எனக் கூறி நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வேலைக்குச் செல்வதற்கு முன்பு குளித்து, புதிய சட்டை அணிந்து சென்றதாகவும், வியர்வை நாற்றம் கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு நடத்தப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்தார்.