பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை (நவ., 06) வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் இன்றும், வருகிற 11ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.