19-வது
IPL கிரிக்கெட்ட
ின் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (மே 26) தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமபலத்துடன் விளங்குவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேளையில், தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்ல மற்றொரு வாய்ப்பு (தகுதி சுற்று 2) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.