மீனவர் நலன் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பணியில்லாக் கால மீன்பிடி உதவித் தொகை மூலம் 1.93 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.