கரூர் 80 அடி ரோட்டில் தவெக 3ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. அப்போது, மழை குறுக்கிட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலியை தலைக்கு பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். இந்த சூழலில், மேடையின் வலது புறம் நடப்பட்டிருந்த தவெக கொடிக் கம்பம் மின் கம்பி மீது உரசியதில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அந்தக் கொடிக்கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் நெற்றியின் மீது விழுந்தது. இதில் அவர் காயமடைந்தார்.