பறவை மோதியதால் விமானம் ரத்து.. பயணிகள் அவதி

4999பார்த்தது
பறவை மோதியதால் விமானம் ரத்து.. பயணிகள் அவதி
நாக்பூரில் இன்று (அக்.25) அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் பறவை மோதியதால், விமானத்தின் என்ஜின் கௌலிங் சேதமடைந்தது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு, அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. சேதமடைந்த விமானம் நாக்பூரில் பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் விமான நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.