இயந்திர கோளாறால் பெங்களூரு செல்லவிருந்த விமானம் ரத்து: பயணிகள் தவிப்பு

4பார்த்தது
இயந்திர கோளாறால் பெங்களூரு செல்லவிருந்த விமானம் ரத்து: பயணிகள் தவிப்பு
சென்னையிலிருந்து 96 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உட்பட 104 பேருடன் இன்று பெங்களூரு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு கண்டறியப்பட்டதால் அதன் சேவை ரத்து செய்யப்பட்டது. பாதிப்புக்குள்ளான பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விமானத்தில் ஏற்பட்ட பழுதுகள் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி