குஜராத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் தற்போது வரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் உள்ளிட்ட சில விமானங்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றன. சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.