தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0பார்த்தது
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடியை எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் 527 கனஅடி உபரி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி